என் பாவங்களை எண்ணி நான் வருந்துவது, எல்லொரும் நம் வாழ்வில் பாவங்களை புரிகிரேம் . ஆனால் சில தவறுகள் மட்டும் நம்மை ஆழ காயபடுத்தும். என்னுடைய விளையாட்டு தனம் சிறுபிள்ளை தனமாக என்னை நடக்கவைத்தது. அந்த தவற்றால் என் நிலையை உணர்ந்து வருந்தி என்னை மாற்றி கொண்டேன்.
அவரது படத்தை திறப்பார்களா?
05 08 2021 கலைஞர் கருணாநிதி, 1937ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989இல் தமிழகச் சட்டமன்றத்தின் பொன் விழாவினை கொண்டாடினார்; ஜெயலலிதா அம்மையார் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் 1952இல் அமைந்த சட்டமன்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, 2012இல் அறுபதாம் ஆண்டு விழா எடுத்தார்; திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், இவர்களை எல்லாம் பல படிகள் தாண்டி சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு அமைந்த நீதிக்கட்சி ஆட்சியினை நினைவில் நிறுத்தி நூற்றாண்டு விழா எடுத்து மகிழ்ந்து இருக்கிறார். 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில், கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தின் ஒரு பகுதி போன்றவை இணைந்திருந்ததை முதல்வர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெறும் படத்திறப்பு என்றால் குடியரசுத் தலைவர் வருவது சந்தேகம் என்று தோன்றியதால் என்னவோ, சட்டமன்ற நூற்றாண்டு விழா என்று ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து விழா எடுத்து முடித்திருக்கிறார்கள். குறுக்கு வழியினைக் கண்டறிதல், கழகங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எது எப்படியோ, விழா கொண்டாட வேண்டும், படம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி விட்டது. பேர...
Comments