ஜாதி என்ற அடையாளம் வேண்டாம்


ஜாதி என்ற அடையாளம் வேண்டாம்



         அன்று தொழில், மதம் சார்ந்து ஜாதி என்ற ஒன்று உருவானது.  காலப்போக்கில் அது அடிமைத்தனத்துக்கும், உயர்மட்ட மக்களுக்கும் இடையே உருவான மோதலின் காரணமாக வலுப்பெற்றது.  ஆனால் இன்றோ அனைவருக்கும் கல்வி, முன்னேற்ற பாதை எல்லாம் கிடைக்கின்ற காலத்தில் இன்னும் பழமையைச் சொல்லி முன்னேற்றத்தில் முட்டுக் கட்டை போடுவது சரியா?.  ஆதியில் இரு உயிரிலிருந்து தான் நாம் அனைவரும் தோன்றி இருப்பதை நம்புவோமானால் இந்த ஜாதி வேறுபாடு நமக்குள் தோன்றாது.

         இரு உயிர்களுக்குள் ஏற்படும் விருப்பத்தைக் கூட புரியாமல் அறியாமை கொண்டு எதிர்ப்போருக்கு ஒரு கேள்வி.

         கடவுள் ஜாதியைப் படைத்தாரா? அப்படியென்றால், ஜாதிக்கு ஒரு ஆண்/பெண் என்றெல்லவா கடவுள் படைத்திருக்க வேண்டும்?.  இதற்கு ஆதாரம் தாருங்கள் நாங்கள் விரும்புவதை நிறுத்திக் கொள்கிறோம்.  உங்கள் விருப்பு/வெறுப்புகளை எங்கள் தகுதியின் அடிப்படையில் அல்லது திறமையின் அடிப்படையிலாவது பாருங்கள்.  நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரக இருக்கிறோம்.

        முதலில் உங்கள் குழந்தைகளை விரும்ப விடுங்கள். இது அவர்களுக்கான உலகம்.  வாழ்க்கையை அவர்களே விளையாட விடுங்கள்.  நீங்கள் எங்களைத் தடுப்பது விளையாட்டு மைதானத்தில் எங்களை பார்வையாளராக உட்கார வைத்துவிட்டு, நீங்கள் விளையாடுவதுப் போல் இருக்கிறது. அப்படி என்றால் விளையாட்டில் ஏறப்பட்க்கூடிய ஆனந்தம், அதனுடைய சாரத்தை முழுமையாக நாங்கள் அனுபவிக்காமல் வெறும் கைத்தட்டிவிட்டு செல்வது நீங்கள் எங்களுக்குத் தரும் மிகப்பெரிய தண்டனை.

       நீங்கள் காட்டும் பெண்ணையோ/ஆணையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார், எங்களுக்குள் இயற்கை விருப்பத்தை ஏற்ப்படுத்தாதவரை.  ஆனால், இயற்க்கையாக வரும் விருப்பத்தை கூட புரியாமால் எங்களை வதைப்பது மனித உண்ர்வுக்கு கொடுக்கக்கூடிய சவுக்கடி.

      இந்த பரந்த உலகத்துக்கு வந்து பாருங்கள். இயற்கையை ரசிக்க ஆரம்புயுங்கள்.  ஏனென்றால் அது நமக்கு கொடுக்க்க் கூடிய ஆனந்தம் அளப்பெரியது.  விருப்பமும், விரும்புவதும் இயற்கையே. எங்களை இயற்கையோடு வாழ விடுங்கள்.

Comments

Anonymous said…
Nice. Continue Posting...
Post with your name/signature in every blog...
My name is Pamaran.. Surely i ll take your suggestion...

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்