சத்தமில்லாத இசை..

என் கவிதை வெளியீடு
பகிர்வு
சுவாசக் காற்றையும் பகிர்கின்றாள்
தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக.
தேடல்
கண்ணில் களவு இல்லை
நெஞ்சில் காமம் இல்லை
காதல் தேடி காலம் மட்டும் நகர்கிறது.
தத்துவம்
அனுபவம் இல்லாமல் தனிமையில்
தத்துவம் ஏது?
பயம்
தெரிந்த விஷயத்தைப் பற்றி கவலைப்பட
தேவயில்லாததால் இறப்பு பற்றிய பயம் இல்லை.
வரத்து
கம்ப்யூட்டர் வரத்து அதிகமானதால்
காதல் கடந்த காலத்திலே தேங்கிவிட்டது.
பெண்கள்
ஆண்களை தொடாமல் செய்யும்
மருத்துவம் பெண்கள்.
பட்டம்
பறந்த பட்டம் தேடி அலைந்தேன் கிடைக்குமென்று
ஆனால் கிடைத்த பட்டமோ என்னை
பறக்க விட்டிருக்கிறது என் சொந்தங்கள் தேடி..
கல்யாண மாலை
இன்று கட்சி வேஷ்டிக்கும் (கரை வேஷ்டி)
கட்சி போஸ்ட்ருக்கும் (கல்யாண பத்திரிக்கை)
தானே திருமணம்.
கேள்வி
என் காதலை அவளிடம் இரண்டு கேள்வியால்
வெளிபடுத்தினேன்.
புரியுதா? புரியவில்லையா?
கல்யாண ஆசை
கல்யாணத்திற்கு பொருள் சேர்த்து அலைந்தவன்
தன் காலுக்கு செருப்பு வாங்க மறந்தான்.
திருத்தல்
அடித்தல் திருத்தலோடு இருப்பது என் கவிதைதான்
ஏனென்றால் கவிதை என்ற வார்த்தையையே
இப்பொழுது தான் எழுதப் பழகிக் கொண்டிருக்கின்றேன்.
குரல்
கைபேசி அழைப்பில் வந்த குரல் அவள்தான்
என்று நெஞ்சு பதைபதைக்க
உதடுகளோ அது காதல் அல்ல! என்றது.
ஆனால் நினைவுகளோ உலறிவிட்டது உண்மையை.
கன்(ணி)னி(ணி)
கன்னி எல்லாம் கணிணியானதால்
மைபூசி கைபேசியில் அலைத்தாலும்
காதல் கூட கடல் அலையானது
வந்த வேகத்தில் சென்றதால்!
கிராமம் VS நகரம்
கலப்பை கம்யூட்டர்
சோத்துச்சட்டி ட்ப்பாவாலா
அறுவடை போனஸ்
நெல்மணி மணி (MONEY)
வெயில் A/C
சுகாதரம் சுற்றுப்புறக்கேடு
சந்தோஷம் ஆட்டம்
விவசாயம் முகசாயம்
பேசியபடி அமர்ந்தோம் முதுகு ஒடிந்த நிலையில்.

கவிதை
           சத்தமில்லாத இசை கவிதை

இடம் கொடு
           மனைவியின் கனவுக்கு இடம் கொடுப்பவனே கணவன்
          நானோ அவள்
                  கனவுக்கும் இடம் கொடுத்தேன்!
                 காதலுக்கும் இடம் கொடுத்தேன்!
                 இடைவெளிக்கும் இடம் கொடுத்தேன்!
                 கொடுத்தவன் கொடுப்பனை இல்லாமல் போனேன்.

மலர் வஞ்சனை
            தென்றலுடன் வாசம் பண்ணுகிறாய்!
          வந்தவன் வண்டானால் தேநீரும் தருகின்றாய்!
          தண்டாய் தாங்கும் என்னை மட்டும் ஏன்
                          தாகத்துடன் விடுகின்றாய்!

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்