நண்பன்


இவனுடைய நட்பு என்னுடைய பள்ளி பருவ்த்தில் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை மிக உற்ற நண்பர்களாக உள்ளோம். இடையில் ஏற்பட்ட கல்லூரி கால தற்கால பிரிவு என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால், இப்போது ஏற்பட்ட பிரிவு சற்று தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. துன்பம் என்ன என்று தெரியாத வயதில் அறிமுகமானோம். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம் அதை உணரும் பருவத்தில். சுமார் நான்கு ஆண்டுகள் எங்களோடு தங்கி எங்களுக்கு புது மகிழ்ச்சியை அளித்தான். அவனிடமிருந்த குழந்தைத் தான் அனைவரையும் ஈர்த்தது. அவன் செய்யும் நகைச்சுவை சொல்லி மாளாது. கற்றுத் தேர்ந்தவன் அவனுடைய நடிப்பு, இசை, பாடும் பாடல் எல்லாம் அவனின் அதன் மேல் உள்ள ஈடுபாட்டைக் காண்பித்தது.

ஒரு காந்தத்தைப் போல, எவ்வித தன்மை கொண்டவரும் மிக எளிதாக அவனின் நகைச்சுவை உணர்வுக்கு ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். எதையும் எதிர்பாக்காத குணம், தெய்வபக்தி இவை அவனின் அடிப்படைக் குணம். இந்த நண்பனின் பிரிவை தாங்க இயலாததால் இந்த பகுதியை அவனுக்கு சம்ர்பிக்கின்றேன். முற்றுப்புள்ளி வைத்து முடிக்க மனம் வராததால் ...............

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்