மன நிலை(ற)


சற்று ஆழமாக யோசித்தால் மன நிலை குன்றியவர்வர்களாலோ, பைத்தியம் என்று கூறுபவர்களாலோ இந்த உலகத்தில் யாருக்கும் யாதொரு பிரச்சனையும் இல்லை. இவர்கள் தனக்கென எந்த ஒரு வட்டமும், சூழலையும் உருவக்கிக் கொள்ளாமல் (எதிர் பார்ப்பும் இல்லாமல்) வாழ்பவர்கள். ஆனால் படித்த, பகுத்தறிவாளன் எனக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள் (சமூக விலங்கு) பிரச்சனைகளை உருவாக்குபவரகளாகவும், அதற்கு தீர்வு தேடி நாட்களைக் கழிப்பவர்களகவும் உள்ளோம்.

இங்கே பிரச்சனை, கவலை, அங்கலாய்ப்பு, இவற்றிற்கு காரணம் மனநிலை
பாதிக்கப்பட்டவர்களால் (படித்தவர்களால்) தான். மனநிலை குன்றியவர்களால் அல்ல. இன்று சமூகத்தில் நாம் பார்க்கும் / கேட்கும் அவலங்களுக்கு காரணம் யார் (படித்தவனா / பாமரனா) என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும். படிப்பும் அது உண்டாக்கிய சூழலும் சமூக விலங்காய் இருந்த நம்மை விலங்காய் மாற்றியுள்ளது.

இப்படிக்கு,
பாமரன்

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்