49’ ஓ

நாம் சமுதாயத்தில் எத்த்னையோ மறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளன. இவை எல்லாம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவை. ஆனால் மக்களால் அவர்களாளே மறக்கப்பட்ட உரிமை 49’ஓ. இதை பயன்படுத்துவர்கள் கணிசமாக இருந்தாலும் இதை அறிந்தும், நமக்கென என்று இருப்பவர்கள் தான்( படித்தவர்கள் ) அதிகம்.
எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாதவர்கள் தன் கருத்தைத் தெரிவிக்க இதை பயன்படுத்தலாம். இதன் மூலம் மக்கள் நலன் மறந்த வேட்பாளரை புறக்கணிக்கவும், மக்கள் நலன் கொண்ட வேட்பாளரை ஆதரிக்கவும் முடியும். இதை பயன்படுத்தும் முறை கடினமானது ஒன்றும் இல்லை. விரலில் மை வைத்து விட்டு 49’ஓ படிவத்தை பூர்த்தி செய்தால் போதும்.
எந்த சுயநலன் கொண்ட அரசியல் கட்சியும் இதை ஆதரிக்கவும், விளரம்பமும் செய்யாது. ஆதலால் படித்த நாம் தான் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நாமோ, பல காரணங்களைச் சொல்லி நம் உரிமை(49’ஓ)யைக் கை கழுவி உள்ளோம். இதனால் கலாச்சாரம், பண்பாட்டை இழ்ந்த நாம் இப்பொழுது நமது உரிமைகளையும் மறைமுகமாக இழ்ந்து வருகிறோம். எந்த ஒரு தனி மனித மாற்றமும் இழ்ந்த உரிமைகளைப் பெற்று தராது. ஆதலால் மாற்றம் கொண்டு மாறுதல் படைப்போம்.
Comments