நிலா

நிலா கவிஞர்களின் கருவூலம், கற்பனைகளின் ஆரம்பம், அழகிற்கு உவமை இதெல்லாம் கவிஞர்களின், சிந்தனையாளர்களின் பார்வையில். நிலா என்பது அழகிற்கும் மேல், அப்பழுக்கற்ற இன்னும் மனிதனால் தீண்டப்படாத, அசுத்தமற்ற இறைவனின் படைப்பு.

இந்த படைப்பில் இறைவனின் பங்கு வழக்கம் போல் உண்டு. இதில் எந்த அசுத்தமோ, மனிதனின் எண்ண கழிவுகளோ, தீமையோ, கலப்படம் இல்லாத இன்னும் ஆரம்ப நிலையைக் கொண்டிருக்கும் துரிதமான, தூய்மையான படைப்பு. இறைவனின் படைப்பில் இன்னும் எத்தனையோ படைப்புகளும், உருமாற்றங்களும் உள்ள நட்சத்திரங்களும், விண்மீன் கூட்டஙகளும் இருந்தாலும் எனக்கு அருகாமையில், என்னால் கண்டு உணரமுடிந்த தூய்மையான படைப்பு. இதில் மனிதனின் காலடி தடம் வேண்டுமனால் பட்டிருக்கலாம். ஆனால் இன்னும் அவனுடைய செயலாக்கத்திற்கு உடன்படாமல் தான் உள்ளது.

இன்னும் துரிதமாக சொல்லப்போனால் நம்முடைய செயல், எண்ணம், சொல், பார்வை இவற்றால் இந்த தூய பூமியையும் அதில் உள்ள இயற்கையையும் நாம் பாழ்படுத்தி உள்ளோம் இருந்தும் இயற்கை தன்னுடைய செயல்பாட்டை மாற்றி கொண்டதே தவிர இன்னும் அது இயற்கையாகவே உள்ளது. நாம் தான் இயற்கையை பாழ்படுத்தி விட்டோம் என்று அரைகூவல் போட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் பாதிப்பானதும், வாழ்க்கை முறையில் மாற்றம் கண்டதும் நாம் தான். ஆதலால் படைப்பு உருமாற்றம் கொள்வதற்குள் (மனிதனால்) படைத்த நிலையிலே இருக்கும் அதை ரசிக்க தொடங்குவோம்.

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்